கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றையதினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது அதைத்தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு மேல் வால்பாறை எம்ஜிஆர் நகர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசைகள் நகர் பகுதியில் மேளதாளம் முழங்க ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு சுமார் 5.30 மணிக்குமேல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ வள்ளி நாயகி, ஸ்ரீ தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் செய்து வரும் நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0