நாம் தமிழர் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய தலைவர்  சேவியர் குமார் படுகொலையை கண்டித்தும், படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்ய வலியுறுத்தியும், இரண்டு பெண் பிள்ளைகளோடு கணவனை இழந்து வாடும் சேவியர் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இழப்பீடும், சேவியர் குமார் அவர்களின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வழியுறுத்தியும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையையும், திமுக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் மாவட்ட செயலாளர் பொருளாளர்கள் உறுப்பினர்கள்   கலந்து கொண்டனர்.