கோவை சூலூர் பக்கம் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 42) தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று தனது பைக்கில் கோவை – திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது .இதில் பாலசுப்பிரமணி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.இது குறித்து அவரது மனைவி நதியா சூலூர் போலீசில்புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்விக்னேஷ் கார் ஓட்டி வந்த சவர பத்ரா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0