தொண்டாமுத்தூர் ரோடு வேடப்பட்டியில் உள்ள ஹரி ஸ்ரீ கார்டன் பகுதியில் வசிப்பவர் பரமேஸ்வரி ( வயது 54) இவரது கணவர் சீனிவாசன் துபாயில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் வீட்டில் பரமேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார் . இவரும் அடிக்கடி துபாய் சென்று கணவரை பார்த்துவிட்டு அங்கு தங்கி விட்டு வருவது வழக்கம் .இந்த நிலையில் பரமேஸ்வரி கடந்த 6 – ந் தேதி துபாய்க்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டில் பூட்டைஉடைத்து பீரோவில் இருந்த 47 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவிசாரணை நடத்தினர்.அதில் கொள்ளையன் யார்? என்பது தெரியவந்தது அந்த கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர். கொள்ளையன் குஜராத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது .இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரைதலைமையில் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த கொள்ளை காஜி பாயை கைது செய்தனர். அவனிடமிருந்து நகை – பணம் மீட்க்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0