டேராடூனில் நடைபெற்ற ஆசிய அளவிலான பென்ஸ் பிரஸ் போட்டியில் கோயமுத்தூர் காவல்துறையில் பணியாற்றி வரும் சூலூர் சார்ந்த விஜயகுமார் 40 வயது உட்பட்ட பிரிவில் 150 கிலோ எடையினை தூக்கி முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். இப்போ போட்டியில் கலந்து கொண்டு வெற்றியுடன் திரும்பிய விஜயகுமார் அவர்களுக்கு சூலூர் கரைய ராயப்பத் தேவர் வீதியில் வசிக்கும் குடிமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் மாலை சால்வை அணிவித்து தாய்மார்கள் ஆரத்திகள் எடுத்து வரவேற்றனர். வீடு வந்ததும் விஜயகுமார் அவர்கள் தன் தந்தையாரின் படத்தை வணங்கி விட்டு தன்னை வரவேற்க வந்தவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0