கோவை நகை பட்டறையில் ரூ 31 லட்சம் தங்கம் திருட்டு…

கோவை கெம்பட்டி காலனி பக்கமுள்ள கே. சி. தோட்டம், சாமி ஐயர் புது வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30 ) இவர் அங்கு தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சலிவன் வீதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் பட்டறையில் இருந்த 530 கிராம் தங்கத்தை திருடிக்கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார்.இதன் மதிப்பு ரூ. 31 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் .இதுகுறித்து பட்டறை அதிபர்கார்த்திகேயன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்துநகை தொழிலாளி லிங்கேஸ்வரனை தேடி வருகிறார்.