மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவை வெங்கடாபுரம் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாலகிருஷ்ணன் என்ற மனோஜ் குமார் ( வயது 21) இவர் சூலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்..இவர் நேற்று சின்னியம்பாளையம் அர்ஜுனன் காலனியில் ஒரு வீட்டில் கதவு பொருத்தும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் இதுகுறித்து அவரது தாயார் சசிகலா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வீட்டில் உரிமையாளர் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.