நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்தி நாடு செம்மேடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் FMR 15 கொல்லிமலை மலைவாழ் மீன் வளர்ப்பு மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் சிறப்பு மகாசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட மீன் துறை சார்ஆய்வாளர் கோகிலவாணி தலைமை தாங்கினார்.
மேலும் இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொல்லிமலை ஒன்றிய சேர்மேன் மாதேஸ்வரி அண்ணாதுரை தின்னனூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் கே .பி .ஜெகதீசன் அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் சி. நாகலிங்கம் வாழவந்தி நாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஈஸ்வரன் கலந்துகொண்டு மலைவாழ் மக்கள் மீன் வளர்ப்போர் சங்கத்தினருக்கு பேசியதாவது கொல்லிமலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை பழங்குடியின மலைவாழ் மக்கள் மீன் வளர்ப்பு மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கம் தொடரப்பட்டு மீன் தொழில் நல்ல முறையில் நடந்து வந்துள்ளது. அதனை தொடர்ந்து திடீரென்று அத்தொழில் விடுபட்டு போனது. அதனை எடுத்து தற்போது அந்த தொழிலை புதுப்பிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பு சங்கத்தினர் கொல்லிமலையில் மட்டும் 243 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் அவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் 50க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் முதல் கட்டமாக வளர்ப்பதற்கு வாங்கி கொடுக்கப்படும் கொல்லிமலையில் பல்வேறு சூழ்நிலை ஏற்ப ஏரி குளம் குட்டைகள் போன்ற பகுதிகளில் கட்லா மீன் போன்ற வகை மீன் குஞ்சுகள் அவர்களுக்கு வழங்கப்படும் மேலும் தனிநபர் அட்டை வாக்காளர் பட்டியல் ஒப்புதல் பெறுதல் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பம் பெறுதல் நலவாரிய உறுப்பினர் சேர்த்தல் இரந்த உறுப்பினர்களை நீக்குவது மீன் வளர்ப்பு தொடர்பாக மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சித்தூர் நாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மீன்வள மேற்பார்வையாளர் விஜய் கொல்லிமலை மலைவாழ் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடத்தக்கது..