கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிக்கலாம் பாளையத்தை சேர்ந்தவர் கண்ணப்பன் ( வயது 60 ) இவரது வீட்டின் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கிணத்துக்கடவு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதை ஊரைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 48) கணேசன் ( வயது 41) குமார் (வயது 48) நாகராஜ் (வயது 47) பாஸ்கரன் ( வயது 47) செல்வகுமார் (வயது 50 ) கண்ணன் (வயது 60 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0