கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கனகராஜ், இவரது மகன் தம்புராஜ் (வயது 35) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து இவரது தாயார் பாப்பாத்தி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் இவர் குடிபோதையில் மரத்தில் ஏறி தவறி விழுந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0