திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் , சுமித்ரா தம்பதியின் மூன்று குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மூவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் 7 வயதான யோகலட்சுமி, 4 வயதான அபிநிதி, 8 மாத குழந்தை புருஷோத்தமன் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யோகாலெட்சுமி மட்டும் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.
அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகியோருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டு வந்த நிலையில், நேற்று இரவு 4 வயதான அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.