மனைவியுடன் தகராறு… 85 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவையை அடுத்த துடியலூர் பக்கமுள்ள ஆனைகட்டி ஆலமரம் மேடு, கொண்டனூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 85) இவர் மனைவி மற்றும் தனது 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்..நேற்று இவர் அவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்குள்ள புங்கை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் நாகராஜ் தடாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.