பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஏஜேகே அல்லது ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது, இது பாகிஸ்தானின் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட சுயராஜ்ய நிர்வாகப் பிரிவாகும். இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் மேற்கே இப்பகுதி உள்ளது, மேலும் இது முன்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது 1947 இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த முதல் காஷ்மீர் போரின் விளைவாக இல்லாமல் போனது.
ஆசாத் காஷ்மீர் பெரிய காஷ்மீர் பகுதியின் ஒரு பகுதியாகும், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகால மோதலுக்கு உட்பட்டது. இப்பகுதி கில்கிட்-பால்டிஸ்தானுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, அதனுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் “பாகிஸ்தான்-நிர்வகிக்கும் காஷ்மீர்” என்று குறிப்பிடப்படுகிறது.இந்நிலையி
ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம்தேதிகளில் நடைபெற்றது. அப்போது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மற்றும் ரயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகப்பெரிய திட்டத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் மோடி, சவுதி அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய 3 பேரும் ஒன்றாக கைகுலுக்கிய வீடியோ வைரலானது.
முன்னதாக ஜி20 நாடுகளின் சுற்றுலா துறை பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு காஷ்மீரில் நடைபெற்றது. அப்போது இந்தியாவுக்கு எதிராக பொய் செய்திகளை பாகிஸ்தான் பரப்பியது. எனினும், இந்தியாவுடன் சவுதி தற்போது உறவை பலப்படுத்தி உள்ளது. அமெரிக்காவும் இணைந்திருப்பதால் இந்த புதிய இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் காஷ்மீர் விஷயத்தில் பல இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ள இஸ்லாமிய நாடுகளும் தயாராகிவிட்டன என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமீரக துணைப் பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தில், அக்சய் சின் பகுதியும் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் – ஐரோப்பிய நாடுகள் – இந்தியா இடையே பொருளாதார வழித்தடம் தொடர்பான திட்டத்தை அறிவித்த பிறகு ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தைத்தான் அமீரக துணை பிரதமர் சயீப் வெளியிட்டதாக கூறுகின்றனர்.
அமீரகம் வெளியிட்ட இந்திய வரைபடத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘‘முழு ஜம்மு காஷ்மீரையும் இந்தியாவின் பகுதியாக காட்டும் வரைபடம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்த வரைபடம் தவறானது. காஷ்மீரின் ஒரு பகுதி சர்ச்சைக்குரிய இடமாக ஐ.நா.வும் கூறியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும்