நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!!
தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால் அரசு ஊழியர்களில் 75 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக வேட்பாளராக களமிறங்குவதற்காக நடக்கும் பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கும் குடியரசு கட்சியின் ஆதரவை பெறுவதற்கும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த விவேக் இராமசாமி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக விவேக் இராமசாமி அவர்கள் அளித்த அந்த பேட்டியில் “நான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 75 சதவீத அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன். மேலும் பல்வேறு வகையான அரசு நிறுவனங்களையும் மூடுவேன்.
எப்.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வுத் துறை, ‘மது, புகையிலை, துப்பாக்கி, வெடிப்பொருட்கள்’ பணியகம், கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் முதலான அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளது. என்னுடைய இறுதி இலக்கு என்ன என்றால் தற்பொழுது 22 லட்சமாக இருக்கும் அரசு பணியாளர்களில் 4 ஆண்டுகள பதவி காலத்திற்குள் 75 சதவீதம் குறைப்பதே என்னுடைய இறுதி இலக்கு ஆகும்” என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.