தேனி மாவட்டம் வீரபாண்டி வளாகத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்று ஏழை எளியவர்களுக்கான திருமண விழா தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் .வி. ஷஜீவனா தலைமையில் 7 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, திருமண சிர்வருசை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள ஏழை எளியவர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வர முடையார் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஏழை எளிய ஏழு ஜோடிகளுக்கு திருமணத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
திருமண ஜோடி ஒருவருக்கு அரசால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஏழு ஜோடிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கப்பட்டது.