ஆவடியில் பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்களை கமிஷனர் சங்கர் விசாரித்தார்..!

ஆவடியில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கண்டறியும் முகாம் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடத்தப்படும் இந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் திருவிழா போல் முடிவு காலம் பிறக்காதா என்ற கனவோடு கையில் கட்டு சாதத்துடன் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர் . போலீஸ் கமிஷனர் சங்கர் மேல் அதீத நம்பிக்கை நேற்று நடத்தப்பட்ட குறை கேட்கும் முகாமில் நிலுவையில் இருந்த 94 மனுக்களில் 76 மனுக்கள்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதியதாக பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களை திருப்தி படுத்த வேண்டும் போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்தார். காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார் மிக திறமையாக செயல்பட்டு வருகிறார் என அங்கிருந்த பொதுமக்கள் கூறினர்..