மதுவில் விஷம் கலந்து குடித்து கருவாடு வியாபாரி தற்கொலை.

கோவை கவுண்டம் பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு,சரவணா நகரை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 48 )கருவாடு வியாபாரம் செய்து வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தாராம்.பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் . சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்  நேற்று இறந்தார் . இது குறித்து அவரது மனைவி அனுசியா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..