பூந்தமல்லியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரும், திருப்பெருமந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ,ஆ. கிருஷ்ணசாமி, ஈஸ்வரன், உதயசூரியன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பூந்தமல்லி நகராட்சியில் 2 வது வார்டு மேல் மாநகரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல் மாநகர் பகுதியில் மழை நீர், கழிவுநீர் தேங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
உடனே நகராட்சி ஆணையர் லதா மற்றும் நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் ஆகியோரிடம் உடனடியாக மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க பொது கணக்கு குழுவினர் அறிவுறுத்தினர்.
உடனே நடவடிக்கை எடுப்பதாக தலைவர், ஆணையாளர் உறுதி அளித்தனர்.
இந்த ஆய்வின் போது பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சுதாகர், கவுன்சிலர் தாமரைக்கண்ணன் சங்கர், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பூந்தமல்லி நகராட்சி மேல் மாநகரில் உள்ள அரசு ஆதி திராவிடர் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.தலைமையில் ஆய்வு நடைபெற்றது.உடன் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், ஆணையாளர் லதா மற்றும் பலர் உள்ளனர்.