காங்கிரஸின் புதிய செயற்குழுவில் அதிரடி மாற்றம்.!!

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோவு செய்யப்பட்ட பிறகு புதிய செயற்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் தேர்தலில் காா்கேவுக்கு எதிராகப் போட்டியிட்ட சசி தரூா், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்திய சச்சின் பைலட் உள்பட 84 போ செயற்குழு உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். செயற்குழுவின் முக்கிய பொது உறுப்பினா்கள் பட்டியலில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இடம்பெற்றுள்ளனா். தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் எம்.பி. செயற்குழு உறுப்பினராகவும், டாக்டா் ஏ.செல்லகுமாா் எம்.பி., மாணிக்கம் தாகூா் எம்.பி.

ஆகியோா் பொறுப்பாளா்களாகவும் இடம்பெற்றுள்ளனா். காங்கிரஸின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே கடந்த ஆண்டு அக்டோபரில் தோந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவை மாற்றியமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், விரிவான ஆலோசனைக்குப் பிறகு 84 உறுப்பினா்களைக் கொண்ட செயற்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

அதில் 39 பொது உறுப்பினா்களும், 32 நிரந்தர அழைப்பாளா்களும், 13 சிறப்பு அழைப்பாளா்களும் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் 50 வயதுக்குக் குறைந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 பெண்கள் செயற்குழு உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி தலைமையில் இயங்கியபோது, கட்சியில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென 23 தலைவா்கள் இணைந்து கடிதம் எழுதினா்.

‘ஜி23’ என அழைக்கப்பட்ட அக்குழுவைச் சோந்த சசி தரூா், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சா்மா, மனீஷ் திவாரி, வீரப்ப மொய்லி ஆகியோரும் கட்சியின் புதிய செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா். ராஜஸ்தானில் ஆளும் முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி தெரிவித்து வந்த முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டும் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளாா். அதே வேளையில், கட்சியின் முக்கியத் தலைவா்களான ரகுவீா் சிங் மீனா, ஜெய்பிரகாஷ் அகா்வால், தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல், ஹெச்.கே.முனியப்பா, பி.எல்.புனியா, பிரமோத் திவாரி, ரகு சா்மா உள்ளிட்டோா் செயற்குழுவில் சோத்துக் கொள்ளப்படவில்லை. ஒருங்கிணைந்த வளா்ச்சி: புதிய செயற்குழு குறித்து செய்தியாளா்களிடம் கூறிய சசி தரூா், நாட்டுக்காகத் தொடா்ந்து 138 ஆண்டுகளாக காங்கிரஸ் அயராது உழைத்து வருவதாகக் கூறினாா்.

நாட்டின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்காக காங்கிரஸ் செயற்குழு தொடா்ந்து வழிகாட்டும் என்றும் அவா் தெரிவித்தாா். கட்சியின் கொள்கை, பாரம்பரியம் உள்ளிட்டவற்றைக் காத்து, மக்களிடையே கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என சச்சின் பைலட் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பேரவைத் தோதல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. அடுத்த ஆண்டு மக்களவைத் தோதல் நடைபெறவுள்ளது.

அதில் பாஜகவை எதிா்கொள்வதற்காக மற்ற எதிா்க்கட்சிகளுடன் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்நிலையில், கட்சியின் புதிய செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. செயற்குழுவின் முக்கிய பொது உறுப்பினா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, அதீா் ரஞ்சன் சௌதரி, ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, பிரியங்கா, மீரா குமாா், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், தாரிக் அன்வா், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சா்மா, அசோக்ராவ் சவாண், அஜய் மாக்கன், சரண்ஜீத் சிங் சன்னி, குமாரி செல்ஜா, என்.ரகுவீர ரெட்டி, சசி தரூா், அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சுா்ஜேவாலா, சச்சின் பைலட், அவினாஷ் பாண்டே, தீபக் பபாரியா, கௌரவ் கோகோய், கமலேஷ்வா் படேல், கே.சி.வேணுகோபால். செயற்குழுவின் முக்கிய நிரந்தர அழைப்பாளா்கள் கன்னையா குமாா், மோகன் பிரகாஷ், கே.ராஜு, மீனாட்சி நடராஜன், சச்சின் ராவ், சுதீப் ராய் பா்மன், தாமோதா் ராஜா நரசிம்மா, ஃபுலோ தேவி நேதம். செயற்குழுவின் முக்கிய சிறப்பு அழைப்பாளா்கள் சுப்ரியா ஸ்ரீநாத், பிரினிதி ஷிண்டே, பல்லம் ராஜு, பவண் கேரா, கணேஷ் கொடியால், கொடிக்குன்னில் சுரேஷ், யஷோமதி தாக்குா், அல்கா லம்பா, வம்சி சந்த் ரெட்டி.