கோவை ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு..!

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் கோவை அவிநாசி ரோடு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலில் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலம் பணிகள் நடந்து வருவதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில்போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்நேற்று மாலை ஆத்துப்பாலம் பகுதிக்கு சென்றார் .அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் .எந்த பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது? அதை தடுக்க வழிகள் என்ன? என்பது குறித்து பார்வையிட்டார். அத்துடன் அங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா ?என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு பணியில் ஈடுபட்ட போலீசருக்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான ஆலோசனையும் வழங்கினார். அதுபோன்று போலீசார் போக்குவரத்தை எப்படி சரி செய்கிறார்கள்? என்பதையும் அவர் கண்காணித்தார். உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு எடுக்கப்பட உள்ள மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.ஆத்துப்பால பகுதியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.