சாலையை கடக்க நின்றவர்கள் மீது அதி வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து- 6 பேர் பலியான சோகம்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில், அதிவேகத்தத்துடன் வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயற்சித்தவர்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். லாரி மோதியதில் படுகாயமடைந்தோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்..