பணியாரம், அப்பம், அடை, அவியல் என தென்னிந்திய உணவு வகைகளை ரசித்து சுவைத்த பிரதமர் மோடி..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு, பணியாரம், அப்பம், அடை அவியல் உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டத்தை மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை உத்தரபிரதேசத்தின் காசி, கோரக்பூர், மற்றும் அவாத் ஆகிய பகுதியைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களை சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக, மேற்கு வங்கம், மேற்கு உத்தர பிரதேசம், ஜார்கண்ட் , ஒடிசா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த என்டிஏ நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து பேசினார்.
நேற்று மாலை தென்னிந்திய பிராந்தியங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்தார். இந்த கூட்டத்தில் ஜி.கே வாசன், தம்பிதுறை உள்ளிட்டர் கலந்து கொண்டனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து, பலதரப்பட்ட பாரம்பரிய தென்னிந்திய வகைகள் கொண்ட உணவு பரிமாறியாதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.