உடனே ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக புடின் அங்கீகரித்தை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வந்த பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
எந்நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், மேற்கத்திய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள், உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
இதனிடையே, ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமக்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம்.
தற்போது ரஷ்யாவில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.