சமுதாய நலக்கூடம், நியாய விலை கட்டிடம் கட்டும் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி 800க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போரட்டம்..!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாப்பான் குளத்தில் சமுதாய நலக்கூடம் . மற்றும் நியாயவிலை கட்டிடம் கட்டும் இடத்தை  தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி தேவேந்திர பேனாக்கள் அமைப்பு நிறுவனர் TC பாலசுந்தரம், மற்றும் ஊர் நாட்டாமைகள் சந்தோஷ் , சண்முகம், வழகறிஞர் சங்கர் ஆகியோர் தலைமையில் ஸ்ரீ பார்வதி அம்மன், முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு800-க்கும் மேற்பட்டோர்
பொது மக்கள் காத்திருப்பு போரட்டம் நடத்தினர்.

பாப்பான்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலமான நத்தம் சர்வே எண் 955-ல் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன் தலைமையில்  17/02/2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  அரசு ஒப்பந்ததாரர் மாரியப்பனிடம் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது..

மேலும் 27/06/2023 அன்று வருவாய் துறையின் மூலம் மேற்கண்ட இடம் சர்வே செய்யப்பட்ட இடத்தை மீண்டும் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துவந்த நிலையில்
பல முறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் ஆக்கிரமிப்பு  அகற்றி நில அளவை செய்து தர மறுத்துவிட்டாதாக கூறுபடுகிறது.

இந்திலையில் அப்பகுதியினர் பார்வதி அம்மன் கோவில் அருகே சுமார்  800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கடையம் காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா, உதவி காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி, கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், குறுவட்ட ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வ கணேஷ், தலையாரி ஏனோஸ் ஆகியேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு நில அளவையர் வீர அய்யனார் தலைமையில் நில அளவை செய்து நான்கு எல்கை மால் குறிக்கப்ட்டு தீர்வு காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியின் கலைந்து சென்றனர்.