வேலூர் தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. தலைமையில் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமுலுவிஜயன் உள்ளிட்டோரும், திரளான ஒன்றிய குழு தலைவர்களும் ஊராட்சி மன்ற தலைவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசுகையில், வேப்பங்குப்பம் ஊராட்சியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுகடை அகற்ற பல முறை கூறியும் நடவடிக்கையில்லை உடனடியாக மதுகடையை அகற்ற வேண்டும் மேலும் ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென பேசினார்கள். இதேபோல் சேனூரிலும் பள்ளி அருகாமையில் உள்ள மதுகடையை அகற்ற வேண்டும். கிராமபுறங்களில் முழுமையாக மதுகடைகளை மூட வேண்டுமென பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்து இந்த கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0