கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… இன்று முதல் தொடங்கியது டோக்கன் விநியோகம்..!

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது..

சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமத்தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன்படி, நியாய விலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் நியாய விலை கடை பணியாளர்கள் டோக்கனுக்கான, விண்ணப்பங்களை வழங்குகின்றனர். மேலும், இதேபோல் மதுரையில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த டோக்கன் விநியோகம் நியாய விலை கடைப் பணியாளர்கள் மூலமாக ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் அந்தமாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.