மின்சார வாகனங்களுக்கு மானியம்.. உத்தரப் பிரதேச அரசு அசத்தல் அறிவிப்பு.!!

க்னோ: உத்தரப் பிரதேச அரசு 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கையில், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியத்தையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மானியத்திற்கு விண்ணப்பிக்க upevsubsidy.in எனும் போர்ட்டலையும் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் புவி வெப்பமயமாவதை கூட குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் இந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மின்சாரம் வாகனங்களின் பயன்பாட்டை 100 சதவிகிதத்திற்கு உயர்த்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மாநில அரசு கூறியுள்ளதாவது, “மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் வாகனங்களை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகும். முதல் விஷயம் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது மாநிலத்தின் மாசுவை பாதியாக குறைக்கும். உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மட்டுமல்லாது வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். எனவே இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதன் காரணத்தினால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இனி உலகமே மின்சார வாகனங்களை நோக்கிதான் நகரும். அதற்கான முதற்படியில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது” என்று இந்த துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்கள் தங்களுக்கான மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. தற்போது இந்த விண்ணப்பத்திற்கான போர்ட்டலையும் (upevsubsidy.in) அறிமுகப்பட்டுத்தியுள்ளது.