கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ பக்கம் உள்ள விமல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவரது மனைவி ஷீலா இவர்களது மகன் சத்தின்தரா ( வயது 14) இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .நன்றாக படித்து வந்த சத்தின்தராவகுப்பில் எப்போதுமே முதல் மார்க் எடுப்பது வழக்கம் .கடந்த மாதத்தில் பள்ளிக்கூடத்தில் அரையாண்டு தேர்வு நடந்தது. அந்த தேர்வை சத்தின்தரா நன்றாக எழுதியிருந்தான். விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளிக்கூடம் திறந்தது அங்கு சென்றதும் அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தி வழங்கப்பட்டது. தொடர்ந்து மதிப்பான அட்டை வழங்கப்பட்டது. வழக்கமாக தேர்வில் முதலிடம் பிடிக்கும் சத்தின் தராவுக்கு அரையாண்டு தெருவில் இரண்டாம் இடம் தான் கிடைத்தது. பள்ளியில் எப்போதும் முதலிடத்தில் இருந்து வரும் சசிந்திரா இந்த முறை இரண்டாவது இடத்துக்கு வந்ததால் தனது நண்பர்களிடம் கூறி அழுது புலம்பினான். வீட்டுக்குச் சென்ற அவன் தனது தாயாரிடமும் அது பற்றி கூறி அழுது இருக்கிறான். அவனுக்கு தாயார் ஆறுதல் கூறினார். இருந்தபோதிலும் சத்தித்தரா தனது நண்பர்கள் மற்றும் உடன்படித்தவர்களுடன் சரியாக பேசவில்லை தனது தாயாருடன் சரியாக பேசாமல் தனியாக இருந்து வந்தான் இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல அவன் பள்ளிக்குச் செல்வான் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததோ அவருடைய தாயார் செய்திடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் பின்னர் அவனுக்கு காப்பி போட்டு கொடுப்பதற்காக பால் வாங்க கடைக்குச் சென்றார் பால் வாங்கிவிட்டு அவர் திரும்பி வரும்போது இங்கு வழக்கமாக இருக்கும் இடத்தில் சத்தின்தரா இல்லை .உடனே அவனின் பெயரைச் சொல்லி அழைத்து தேடினார். படுக்கைக்கு சென்றபோது அங்கு சத்தின் தரா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ..இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0