குஜராத் வைர வியாபாரியின் 9 வயது மகள் சமண துறவியானார்… பலகோடி ரூபாய் சொத்து, ஆடம்பர வாழ்க்கையும் துறந்தார்..!!

குஜராத்: ஆடம்பர வாழ்க்கை பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து விட்டு குஜராத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் துறவு பூண்டுள்ளார்.

 

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்த்தவர் தனிஷ் இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக வைரத்தை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இவருக்கு 9 வயதில் தேவன்ஷி என்ற மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தேவன்ஷிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே துறவறம் மீது நாட்டம் இருந்தது இதன் காரணமாக சமண துறவிகளுடன் சாலையில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்றுள்ளார்.

தந்தை சேர்த்து வைத்துள்ள பலகோடி ரூபாய் சொத்து ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பாமல் சமண துறவியாகவே நாட்டம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இதற்காக தீட்சை பெரும் நிகழ்ச்சி சூரத்தில் ஒரு வாரமாக விமர்சையாக நடந்தது. குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்கள் முன்னிலையில் ஆட்சாரியா விஜய் கிதியா சூரி தேவன்ஷிக்கு தீட்சை கொடுக்க அவர் துறவி வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.