கோவை காட்டூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 1574) திடீர்சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) ராமநாதபுரம் மாவட்டம் ராஜ்குமார் ( 55) திட்டக்குடியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .383 மது பாட்டில்களும், மது விற்ற பணம் ஆயிரத்து ரூ, 5, 900 பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடைவீதி பக்கம் செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நடத்திய சோதனையில் 91 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன் ( 36 ) இளையராஜா (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் உக்கடம் பைபாஸ் ரோடு ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நடத்திய திடீர் சோதனையில் ராமு ( 41 )சங்கர் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 302 மது பாட்டில்களும் பணம் ரூ. 7500 பறிமுதல் செய்யப்பட்டது. குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவற்றதாக தஞ்சை மாவட்டம் சிவவேல ( 29 )கைது செய்யப்பட்டார். 66 மதுபாட்டில் களும்,ரூ.15,830 பணமும் கைப்பற்றப்பட்டது. போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் ரகுபதி ( 31 ) பாரதி ( 29)வெங்கடேஷ் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 41 மது பாட்டில்களும் பணம், ரூ 6,800 பறிமுதல் செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0