கோவை ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா சிக்கியது

கோவை; வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா மற்றும் போதை பொருட் கள் கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கிரீஸ் தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் நடை மேடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு சாக்குப்பை அனாதையாக கிடந்தது. அதை திறந்து பார்த்தனர். அதில் 9 பார்சல்களில் தலா 1 கிலோ வீதம் 9 கிலோ கஞ்சா இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதை பீகார் மாநிலத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் கடத்தி வந்தது யார்? என்பது தெரியவில்லை. 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.