கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோமனூர் அருகே சென்று திடீர்சோதனை மேற்கொண்டனர். அப் போது பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சனாதன் டோரா மகன் அபிஷேக் டோரா(30) மற்றும் அபிஷித் டோரா(27) ஆகியோர்களை கைது செய்தனர். அவரிடமிருந்து 9கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். இருவரையும்நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 87 நபர்கள் மீது 52 வழக்குகள்பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 113.945 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனஇதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0