சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 1/2 கிலோ வானத்தில் பறக்கும் கஞ்சா பிடிபட்டது. குற்றவாளிகள் 2 பேர் கைது!

சென்னை: சமீப காலமாக ரயில் நிலையங்களிலோ ஓடும் ரயில்களிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் போதை ஊசிகள் எடுத்து வரப்படுவதோ விற்பனை செய்யப்படுவதோ அடியோடு தடை செய்யப்பட்டதாக தமிழக போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார் வையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப் பிரண்ட் கர்ணன் ஆகியோரது முன்னிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ஆகியோர் வானத்தில் பறக்கும் 2 கிலோ கஞ்சாவை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடுத்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாத்வி வயது 40. என்பவள் கைது. செய்யப்பட்டால் அவள் போலீசாரிடம் கூறியது இந்த கஞ்சாவை பயன்படுத்தி பாருங்கள் வானத்தில் பறக்கும் அனுபவம் கிடைக்கும் என போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் காலில் விழுந்து கதறி அழுதாள். இதேபோல் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் தொட்டா ராமகிருஷ்ணா வயது 24. தகப்பனார் பெயர் அப்பாராவ். காலனி மதா லா ஸ்ரீகா குளம் ஆந்திர பிரதேச மாநிலம். இவன் ஆந்திராவில் இருந்து 7 1/2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தான். இந்த கஞ்சாவை புகைத்தால் மூன்று நாட்கள் சொர்க்கத்தில் மிதக்கலாம் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். புழல்மத்திய சிறையில் அடைத்தனர்.