கோவை மாவட்டம் ,சிறுமுகை, ஜீவா நகரை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மனைவி பழனியம்மாள் (வயது 88 )இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்தபழனியம்மாள் நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் முருகேசன் சிறுமுகை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0