கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் 848 பேர் கைது.

கோவை; அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் அதிமுகவினர் அம்மன் கே.அர்ஜுனன் எம்எல்ஏ தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..இந்த நிலையில் இவர்களை போலீசார் கைது செய்தனர். தம்பிதுரை வேலுசாமி உட்பட மொத்தம் 367 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 49 பேர் பெண்கள் ஆவார்கள். பிறகு இவர்கள்ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல கோவை துடியலூர் பஸ் நிலையம் அருகே அருண்குமார் எம்எல்ஏ தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் கலந்துகொண்ட செல்வராஜ் எம்எல்ஏ முன்னாள் கவுன்சிலர் மனிதா மனி உட்பட 481 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 62 பேர் பெண்கள் ஆவார்கள்.