கோவையில் நள்ளிரவில் டாஸ்மாக் பாரில் மதுவிற்ற 8 பேர் கைது.

கோவையில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் பார்களில் கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதை யடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மதுபாட்டில்களை பூமிக்கு அடியில்பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பரமக்குடி ஹக்கீம் ராஜா (வயது 37) செய்யப்பட்டார். பாப்ப நாயக்கன் பாளையம் காட்டூர் ரோட்டில் மது விற்றதாக கமுதியைச் சேர்ந்த குமரேசன் ( வயது 26) செய்யப்பட்டார். சங்கனூர்,கண்ணப்பன் நகர் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்ற பெரியநாயக்கன்பாளையம்,புதுப்பு தூரை சேர்ந்த சேகர் (வயது 32)கைது செய்யப்பட்டார். இதேபோல இடையர்பாளையம் சிங்காநல்லூர் ஒண்டிபுதூர் பகுதிகளில் டாஸ்மாக் பார் அருகே நள்ளிரவில் மது பெற்றதாக சந்திரசேகர் ( வயது32) சுரேஷ்குமார் ( வயது38) நாகமணி ( வயது 60) பழனிச்சாமி (வயது 40) ராஜேந்திரன் ( வயது 38) செல்வம் (வயது 35 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 280 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.