நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்
75 ஆவது குடியரசு தினவிழாவிற்கு பங்கேற்க வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவரை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர், கூடுதல் ஆட்சியர் தனபிரியா, மற்றும் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் கெலசிக்
இ. ஆ. ப., நீலகிரி மாவட்ட மத நல்லிணக்க அமைதிக்குழு ஒருமைப்பாடு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஆசி முகமது அலி குழுவினர் விழாவிற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை வரவேற்கும் விதமாக பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர், மற்றும் உயர் அரசு அதிகாரிகளையும் வரவேற்றனர்,
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தேசிய கொடியினை ஏற்றி
வைத்து, மரியாதை செலுத்தினர் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவர்கள் முன்னிலையில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார், தொடர்ச்சியாக உலக சமாதானத்தின் நினைவாக
வண்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்க விட்டனர், 2023 ஆம் ஆண்டு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, தன்னலமற்ற சேவை, கடமை, நேர்மை மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றியமைக்காக 18 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கத்தினையும், காவல்துறையில் சார்பில் 14 நபர்களுக்கும், வருவாய்த்துறை சார்பில் 11 நபர்களுக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் தலா 4 நபர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்ட அலுவலகம், தொகுப்பாளர்கள் என தலா 3 நபர்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மருத்துவக் கல்வித்துறை), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, செய்தி மக்கள்
தொடர்பு அலுவலகம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, உதகை நகராட்சி, குன்னூர் நகராட்சி, நெல்லியாளம் நகராட்சி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அலுவலகம், நீலகிரி பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் ஊட்டி பத்திரிக்கையாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தலா 4 நபர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது, மாவட்ட சமூக நல
அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், முன்னாள் படைவீரர் நலத்துறை, தமிழ்நாடு அரசு தேசிய வேலைவாய்ப்பு பணிஅலுவலகம், தொழிலாளர் நலத்துறை, பொதுப்பணித்துறை (மின்சாரம்), நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய துறைகளின் சார்பில் தலா 1 நபருக்கும், குன்னூரில் 30.09.2023 அன்று நடந்த பேருந்து விபத்தில் மீட்பு பணியில் இரவும் பகலும் அயராது உழைத்து பல உயிர்களை காப்பாற்றி சிறப்பாக பணிபுரிந்த 8 குன்னூர் முதல்
நிலை பொறுப்பாளர்களுக்கு என மொத்தம் 122 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, கௌரவித்தார்,அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் வீரமரணமடைந்த படைவீரரின் தாயாருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியத் தொகையாக 01 நபருக்கு ரூ.25,000/-மும், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார
இயக்கம் சார்பில் 01 பயனாளிக்கு வங்கி கடனுதவியாக ரூ.20 இலட்சம் பெறுவதற்கான
ஆணையினையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் வைப்புத்தொகைக்கான பத்திரங்களையும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ், ரூ.8,000/- மும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.99 இலட்சம் மதிப்பிலான மின்களத்தால் இயங்கும் சக்கர நாற்காலியும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.42,500/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.24.18 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்,பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளர் அரசு துரை சார்ந்த அதிகாரிகள் காட்டுநாயக்கர் மற்றும் கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தினையும், அணிக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, கேத்தி சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் பள்ளி, உதகை சாந்திவிஜய்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குஞ்சப்பணை அரசு பழங்குடியினர் குடியிருப்பு தொடக்கப்பள்ளி, கோத்தகிரி சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி மற்றும் குன்னூர் புனித மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி, உதகை ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும், தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல்த்துறையின் சார்பில்
நடைபெற்ற துப்புரவு காவல் பணி நாய்களின் வீர நிகழ்வினையும், அருவங்காடு வி.டி சிலம்ப கலைக்கூடம் மற்றும் வி.எச் முத்து ஊட்டி சிலம்பாட்ட சங்கத்தின் சிலம்பாட்ட நிகழ்வினையும் பார்வையிட்டு கண்டுக்களித்தனர், இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌசிக் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (உதகை), பூஷணகுமார் (குன்னூர்), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கல்பனா, உதவி இயக்குநர்கள் இப்ராகிம்ஷா (பேரூராட்சிகள்), சாம்சாந்தகுமார் (ஊராட்சிகள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது),மணிகண்டன் (வளர்ச்சி), கண்ணன் (கணக்குகள்), உதவி ஆணையர் (கலால்) சதிஷ், உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ) ஷோபனா, புதை வட்டாட்சியர் சரவணகுமார் உட்பட நீலகிரி மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழு தலைவர் பி கே கிருஷ்ணன், செயலாளர் ஆசீர் முகமது அலி, இணை செயலாளர் விஸ்வநாதன், குமாரசாமி, அமைதி குழு ஊடகத்துறை சுரேஷ் ரமணன், நிர்வாகிகள் அமுதவல்லி, வாசமல்லி, ஆகியோரும் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டு 75 ஆவது சுதந்திர தின விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0