சூலூர் பேரூராட்சியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்…

75வது சொல்வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தேசிய கொடியை பறக்க விட்டு மரியாதை செய்தார். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பேரூராட்சியில் சேகரிக்கப்படுகின்ற குப்பை கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தினை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையைக் கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் லலிதாதேவி, லலிதா, சன்மதி, வெண்ணிலா, பாலாஜி, தங்கமணி, விஜயலட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள் இணைந்து வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது