ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் 75 ஆவது குடியரசு தினம் …

கோபி ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் 75 ஆவது குடியரசு தினம் ( 26.01.2024)அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா வரவேற்புரை வழங்கி விழாவினை துவங்கி வைத்தார். மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. ப. வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய குடியரசு தின விழா அனைவருக்கும் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் முதல் பரிசை மு. க. கௌசல்யா இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி மற்றும் இரண்டாம் பரிசு பா.பிரவீனா இரண்டாம் ஆண்டு வங்கி மற்றும் காப்பீட்டு துறை இதில் பரிசு பெற்ற மாணிவிகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பரிசினை வழங்கி சிறப்பித்ததை இத்தருணத்தில் வாழ்த்தினார். பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்க விழா இனிதே நிறைவுற்றது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் செய்திருந்தனர்.