கோவையில் 75 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்.

கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு வழக்கமாக தினமும் 1,100 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டது. இதனால் பட்டாசு குப்பைகள் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக மத்தாப்பு புஷ்வாணம், சங்கு சக்கரம்,சரவெடி உட்பட பட்டாசு குப்பையில் தேங்கியுள்ளன. அவற்றை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள் இது குறித்து மாநகராட்சிஅதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாநகரில் 75 டன் பட்டாசு கழிவுகள் தேங்கியுள்ளன. அவற்றை அகற்றும்பணி துரிதமாக நடந்து வருகிறது..இன்று (சனி) மாலைக்குள்அனைத்து குப்பைகளும் அகற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.