கோவை அருகே தொழில் அதிபர் காரை வழி மறித்து கொள்ளடிக்கமுயன்ற வழக்கில் மேலும் 7 பேர் கைது.

கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27) தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கேரளா நோக்கி காரில் சென்றார். அவர் கோவை மதுக்கரை அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பாலத்துறை பகுதியில் வந்த போது அவரை பின்தொடர்ந்து 3 கார்களில் ஒரு கும்பல் வந்தது .அந்த கும்பல் திடீரென்று அஸ்ஸலாம் சித்திக்கை வழிமறித்து தாக்கியது .மேலும் வந்து காரில் ஹவாலா பணம் இருப்பதாக கருதி கொள்ள யடிக்க முயன்றது .ஆனால் பணம் எதுவும் இல்லாததால் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது .இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி ராணுவ வீரரான விஷ்ணு, அஜய்குமார் , சிவதாஸ், ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர் கடந்தசில தினங்களுக்கு முன்பு டிரைவரான விஷ்ணு என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் பேரில் 3 தனிபடைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாலக்காட்டை சேர்ந்த நித்தின் ( வயது 23) ஹரிஷ் குமார் ( வயது 28) ஜினி (வயது 30) அனீஸ் (வயது 38) நந்தகுமார் (வயது 31) ராஜிவ் (வயது 35) ஜித்தீஸ் (வயது 32) ஆகிய 7 பேரை நேற்று மாலையில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை முயற்சியில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.