உதகை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் 62வது மருந்தாக்கியல் வார விழா …

நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் 62வது மருந்தாக்கியல் வார விழா கோலகலமாக தொடங்கியது ஒரு வாரகாலம் நடைபெறும் இவ்விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய நடனத்தை அரங்கேற்றி அனைவரும் வரவேற்றனர், 62வது மருந்தாக்கியல் வார விழா கணபதி துதியுடன் தொடங்கியது விழாவை கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், மைசூரு ஜெ.எஸ்.எஸ் பல்கலைகழக தேர்வு துறை துணை கண்ட்ரோலர் முனைவர் நாகேந்திரபிரசாத் உள்ளிட்ட சிறப்பு அழைப்பார்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்,
கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் வரவேற்புரையாற்றினர். விழாவில் ஜெ.எஸ்.எஸ் பல்கலைகழக டீன் முனைவர் விசால்குமார் குப்தா தலைமை உரையாற்றினார்,
மத்திய அமெரிக்க நாடான கேமருனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் கோபா கவா தியோடரா, பேராசிரியர் முனைவர் அஸ்வினி,ஓசூர் விங்கா பார்மா நிர்வாக இயக்குநரும் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி முன்னால் மாணவருமான ஜெயபிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி முதன்மை அலுவலர் பசவலிங்கதேவரு,நீலகிரி பாராமெடிக்கல் சங்க தலைவர் முனைவர் வடிவேலன்,துணை தலைவர் முனைவர் ஜவகர்,பொது செயலாளர் முனைவர் கணேஷ்,பொருளாளர் முனைவர் காளிராஜன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர், பேராசிரியர்கள் ,மாணவ.மாணவிகள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர், துணை முதல்வர் முனைவர்,கே.பி.அருண் நன்றி கூறினார். ஒரு வாரம் நடைபெறும் விழாவில் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை வெளிகொணரும் வகையில் ஆரோக்கியசமையல் போட்டி,கோலபோட்டி, ஓவியபோட்டி,நடன போட்டி மற்றும் கண்கவர் கலைநிகழ்வுகள் நடைபெறுகின்றன, பேராசிரியர்கள் , மாணவ.மாணவிகள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன விழா நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுவதால் கல்லூரி முழுவதும் விழா கோலமாக காணப்படுகின்றன.