கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிளி வளர்ப்பு மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.ஆனால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி பச்சை கிளிகள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் நான்காவது வகை பட்டியலில் இருக்கின்றன.
அதனால் பச்சை கிளிகளை வளர்ப்பது மற்றும் விற்பது குற்றம். ஆனால் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் நேரடியாக கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
பச்சை கிளிகளை குஞ்சு பருவத்திலேயே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும் அன்பாகவும் பழகும். அதனால் பலரும் பச்சை கிளிகளை வளர்க்க விரும்புகிறார்கள். அதே சமயம் சுதந்திரமாக பறக்கும் கிளிகளைப் பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள்.ஒரு ஜோடி கிளி இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கிளி வளர்ப்பில் ஈடுபட்டால் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.