உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில்நேற்று மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பினவறையில் வைக்கப்பட்டுள்ளது,
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு விபத்தில் சிக்கி பலியான
தகவல் அறிந்தவுடன் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சத்தக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், செல்வராஜ், எல்கில்ரவி, ரமேஷ், விஷ்ணு, கழக நிர்வாகிகள் காந்தள் ரவி, அந்தோனி மேத்யூஸ், தியாகு, வெங்கடேஷ், கண்ணியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..