வால்பாறையில் இருந்து ஆனைமலை ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற இந்து முன்னணியினர் 58 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணத்தில் தமிழக அரசை கண்டித்தும். இந்து ஆலயங்களில் இருந்து அரசின் அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையிலேந்தியவாறு இந்து முன்னணியின். கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வால்பாறை ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் கோவை மாவட்ட கோட்டச் செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், சந்தோஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பி.ராஜேஷ்,பொன்ராஜ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததால் ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் காவல்துறையினரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வால்பாறையிலிருந்து வாகனங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவத்தால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்.