கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுதகவல் தொழில்நுட்பம் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 504 செல்போன்கள் மீட்கப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ 94 லட்சத்து78, ஆயிரத்து 500 ஆகும். இவைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று மதியம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உரியவரிடம் அவைகளை ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக் கொண்டவர்கள் கோவை மாவட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0