தாம்பரம் மாநகர காவல் தாம்பரம் காவல் மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 12.10.23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பீர்க்கன்கரனை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் கழிவு வாகனங்களாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவு எண் ஆதாரங்களுடன் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் 7.10.2024 காலை 10 மணிக்கு மாலை 5 மணிக்குள் முன்பதிவு கட்டண ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பதிவு செய்த ஏலதா ரர்கள் ஏல குழுவினர் முன்னிலையில் 17.10.2024 அன்று காலை 10 மணிக்கு பீர்க்கங் கரணை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.மேலும் பதிவு செய்த நபர்கள் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.ஏ லத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத் தொகையை அன்றைய தினமே 100% சத விகிதம் கட்ட வேண்டும்.மேலும் அதற்கான ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்பட்டு ஏலம் எடுத்த வாகனங்களை எடுத்துச் செல்ல அனும திக்கப்படுவார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0