மளிகை கடையில் 50 கிலோ குட்கா பறிமுதல். வியாபாரி கைது.

கோவை கிணத்துக்கடவு போலீசார் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில்நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது இதை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜ் மகன் ஜோதி பொன்னு லிங்கம் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 கிலோ குட்காபறிமுதல். செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடைக்கு சீல் வைக்கப்பட்டது.