மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 5 மரங்கள் அனுமதியின்றி வெட்டி சாய்ப்பு.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 53 வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிப்பாளையம் கிராமம்,ஜிவி ரெசிடென்சி அருகில்சக்தி அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ஒ.எஸ்.ஆர்.இடத்தில் 15 வருடங்களான பழமையான 5 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அனுமதியின்றி கடந்த வியாழக்கிழமை யாரோ வெட்டி சாய்த்து உள்ளனர். இதுகுறித்து கோவை தெற்கு கோட்டாட்சியர் மற்றும் தெற்கு வட்டாட்சியர்,கிரீன் கார அமைப்பு சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.