கோவை மாவட்டத்தில் குட்கா கடத்திய 5 பேர் மீது குண்டர் தடுப்புசட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், ஆலாந்துறைகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30)கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31)ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31 காளிமுத்து மகன் சரவணகுமார் (26) மற்றும் கோவைசாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரி மகன் நிஷாந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.